திட்டுவிளை என்னும் ஊர் தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.இங்கு இஸ்லாம் சமயத்தவர் அதிகம் வசிக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து கடுக்கரை மலைக்கு செல்லும் வழியில் துவரங்காட்டை அடுத்து திட்டுவிளை ஊர் உள்ளது. இங்கு மைதா உணவு வகையான பரோட்டா மற்றும் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றது.ஆயுர் வேத மருத்துவத்துவத்திற்கும் இவ்விடம் பெயர் பெற்றது.
தடாகை மலை முக்கடல் அணை உலக்கை அருவி காளிகேசம் அருவி என சகல அம்சங்களும் அருகே அமையபெற்ற திட்டுவிளையில் ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்!
நாகர்கோவில் மற்றும் வடசேரியில் இருந்து 4ம் எண் வழிதடத்தின் அனைத்து பேருந்துகளும் இயங்கும் திட்டுவிளையில் காயிதே மில்லத் சாகிப் நிலைவாக பெயர் கொண்ட பேருந்து நிலையமும் உள்ளது.
பூதப்பாண்டியை பேரூராட்சியாகவும்
தோவாளையை தாலுகாவாகவும்
ஈசாந்திமங்கலத்தை வருவாய் கோட்டமாகவும் கொண்ட திட்டுவிளை ஒரு ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி அரசு தொடக்கப்பள்ளி என அரசு பள்ளிகளும்
BISHOP GNANADASON CSI MATRICULATION SCHOOL, ST. FRANSIS ASSISI MATRICULATION SCHOOL, CAROL MATRICULATION SCHOOL, VINS MATRICULATION என தனியார் பள்ளிகளும் உள்ளது.
No comments:
Post a Comment