Breaking

About




திட்டுவிளை என்னும் ஊர் தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.இங்கு இஸ்லாம் சமயத்தவர் அதிகம் வசிக்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து கடுக்கரை மலைக்கு செல்லும் வழியில் துவரங்காட்டை அடுத்து திட்டுவிளை ஊர் உள்ளது. இங்கு மைதா உணவு வகையான பரோட்டா மற்றும் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றது.ஆயுர் வேத மருத்துவத்துவத்திற்கும் இவ்விடம் பெயர் பெற்றது.
தடாகை மலை, முக்கடல் அணை, உலக்கை அருவி, காளிகேசம் அருவி என சகல அம்சங்களும் அருகே அமையபெற்ற திட்டுவிளையில் ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்!
4-ம் எண் வழிதடத்தின் அனைத்து பேருந்துகளும் இயங்கும் திட்டுவிளையில் காயிதே மில்லத் சாகிப் நினைவாக பெயர் கொண்ட பேருந்து நிலையமும் உள்ளது.
பூதப்பாண்டியை பேரூராட்சியாகவும்
தோவாளையை தாலுகாவாகவும்
ஈசாந்திமங்கலத்தை வருவாய் கோட்டமாகவும் கொண்ட திட்டுவிளை ஒரு ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் உள்ளது.

மாவட்டத்தின் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக திட்டுவிளை ஜும்ஆ மசூதி திகழ்கிறது!
குருசடி அந்தோணியார் ஆலயம், CSI ஆலயம், மார்த்தால் பிரான்சிஸ் அசிசி ஆலயம் என கிறித்தவமத ஆலயங்களும்,
திட்டுவிளை உச்சிமாகாளி கோவில், விளாங்காடு கோவில், அருகில் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் என இந்து கோவில்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மதநல்லிணக்கம் பேணும் ஊராக திட்டுவிளை திகழ்கிறது!
அருகில் உள்ள பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தைமாத திருவிழா தமிழ்நாடு புகழ்பெற்றது!
அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி என அரசு பள்ளிகளும், ISLAMIC MODEL MATRICULATION SCHOOL,
BISHOP GNANADASON CSI MATRICULATION SCHOOL, ST. FRANSIS ASSISI MATRICULATION SCHOOL, CAROL MATRICULATION SCHOOL, VINS MATRICULATION SCHOOL என தனியார் பள்ளிகளும் உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற இடங்களான திற்பறப்பு அருவி 29kms, மாத்தூர் தொட்டிப்பாலம் 28kms, பத்மனாபபுரம் அரண்மனை 21kms, நாகர்கோவில் 13kms,கன்னியாகுமரி 29kms தொலைவிலும், திருவனந்தபுரம் சர்வதேச விமானதளம் சுமார் 80kms தொலைவிலும்
அமைந்துள்ளது!


என்னைப் பற்றி 

நான் FIROZ THITTUVILAI கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திட்டுவிளை பகுதியை சேர்ந்தவன். INTERNET TECHNOLOGYஇல் உள்ள ஆர்வம் காரணமாக இந்த தளத்தை வடிவமைதிருகிறேன். 


என்னை தொடர்பு கொள்ள ➤இங்கே கிளிக் செய்யுங்கள்



No comments:

Post a Comment