Breaking

Friday, July 21, 2017

மாட்டிறைச்சிக்கான 27 விதிகளுக்கு நீதிமன்றங்கள் தடை: பசுவதை தடை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்


மாட்டிறைச்சிக்கான 27 விதிகளுக்கு நீதிமன்றங்கள் தடை: பசுவதை தடை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
சென்னை, ஜுலை 15- மாட்டிறைச்சி சம்மந்தமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள 27 விதிகளுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன என்றும், பசுவதை தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
மத்திய பா.ஜ.க. அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து 32 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் செயலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 14.07.2017 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.
தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., கண்டன உரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசியதாவது:-
ஜுன் 22ம் தேதி அரியானவுக்கு பல்லாப்கர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி தின்பவன் என்று ஹாபிஸ் ஜுனைத்தை படுகொலை செய்தனர். நாடு முழுவதும் 32 உயிர்களை படுகொலை செய்திருக்கிறார்கள். அதை கண்டிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கின்ற எல்லா தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பொழுது சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து மாட்டிறைச்சியை மட்டுமே காரணம் காட்டி இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. டெல்லி, அரியானா, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்த கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவிலும் இந்த கொடுமை பரவி வருகின்றது. இதற்கெல்லாம் காரணம் இந்துத்துவா பிரசசாரம் தான். இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது ஒரு போதும் நடக்காது. அப்படி நடைபெற்றால் 25 கோடி முஸ்லிம் மக்களின் பிணத்தின் மீதுதான் நடக்கும். இந்திய நாட்டுக்கே உண்டான தேசிய ஒருமைப்பாடு, கலாச்சாரம், சமய நல்லிணக்கம், சட்டத்திட்டங்கள் உள்ளன. ஆண்டவர்களும் இதைத்தான் வழிகாட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நாடு ஒரு மொழிக்கோ, மதத்திற்கோ, ஜாதிக்கோ சொந்தமானதல்ல. அப்படி செய்பவர்கள் அறிவில்லாதவர்கள். மாட்டிறைச்சி சம்மந்தமாக மத்திய அரசு 27 விதிகளை வெளியிட்டிருக்கிறது. சென்னை, மதுரை நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த அறிவுப்பூர்வமாக மத்திய அரசின் விதிகளுக்கு தடை விதித்திக்கிறார்கள். அதை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் மத்திய அரசு வெளியிட்டுள்ள 27 விதிகளுக்கு தடை வழங்கியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு 27 விதிகளை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாடு பெரியார், அண்ணா, காயிதே மில்லத்,காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர்.வழியில் தொடர்ந்து செல்கிறது. இங்கு சமய நல்லிணக்கத்தோடு வாழ்கிறோம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் மாட்டை ஓட்டி சென்ற ஒரு பெண்மணியை தடுத்து நிறுத்தி மாட்டை அறுப்பதற்காகவும், கறிக்காகவும்தான் எடுத்து செல்கிறாயா. என்று அந்த பெண்மணியை தடுத்து நிறுத்தி தாக்கியிருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கின்றது. நாட்டை பாதுகாக்கின்ற பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இல்லையா? மத்திய அமைச்சர் யாரும் கண்டிக்கவில்லை. பிரதமர் மோடி மாநில அரசுகளின் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று உத்திரவிடவில்லை. டெல்லியில் நடந்த சிறுபான்மை நலத்துறை கூட்டத்தில் வக்பு வாரிய அமைச்சர் இதை கண்டித்து தீர்மானம் போட வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கேட்டார்கள். ஆனால் கண்டித்து தீர்மானம் போடவில்லை. கூட்டத்தை புறக்கணித்து எம்.பி.க்கள் வெளியேறினார்கள். இத்தகைய அட்டுழியம், கொடுமைகளையெல்லாம் மத்தியில் உள்ள அமைச்சர்களை தூண்டி கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆனில் கூட பன்றிக்கறியை இஸ்லாமி யர்கள் உண்ணுவது ஹராம் என்று உள்ளது. 56 நாடுகள் முஸ்லிம் நாடுகள். பன்றிக்கறி உண்ணக்கூடாது என்று சட்டம் போடவில்லை. உணவு விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. இன்றைக்குக்கூட நான் படித்தேன். ரிக் வேதத்தில் பசுவை நெருப்பிலிட்டு, சுட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வேதத்திலே சொல்லப் பட்டிருக்கின்றது. பசுவுக்கு பால்கறவை நின்று விட் டால் விவசாயி அதை எப்படி பராமரிக்க முடியும். விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் அல்லவா. யார் உங்களுக்கு உரிமை கொடுத்தது. காந்தி, நேரு கொடுத்தார்களா? உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மாட்டிறைச்சியால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். ஓய மாட்டோம்! ஓய மாட்டோம்! என்று இங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டது. ரோட்டுக்கு வந்து விட்டால். எங்கள் பிரச்சினை தீரும் வரை வீட்டுக்கு போகமாட்டோம். என்பது தான் அதற்கு அர்ததமாகும்.வதை என்பது காதில் ஓட்டை போட்டாலோ, மாட்டை தார்குச்சியால் குத்தினாலோ வதையாகும். உணவுக்கு மாட்டையும், ஆட்டையும், கோழியும் அறுபது எப்படி வதையாகும். உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போடப்பட்டுள்ள பசுவதை தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். வன்முறைக்கு துணியவும் மாட்டோம்; பணியவும் மாட்டோம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இப்போது இந்தியாவிலும் மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் இன்றைக்கு ஒன்றிணைந்திருக்கிறது. இந்த முயற்சியில் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வரும் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாக் கவும் உறுதியேற்கும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

No comments:

Post a Comment