Breaking

Friday, July 21, 2017

இந்த மாணவனை நாமும் பாராட்டலாமே!!


நாகர்கோவில் கோட்டாறு வேம்படித்தெருவைச் சேர்ந்த மாஹின் அவர்கள் மகன் செல்வன் அப்துல் மாஜித்
5ம் வகுப்பு படிப்பை நிறுத்திவிட்டு (உள்ளூரிலுள்ள)
பிர்தெளசிய்யா அரபிக் கல்லூரியில் குர்ஆன் மனனம் செய்ய துவங்கியுள்ளார். விரைவாக மனனம் செய்து முடிக்கவும், மீண்டும் படிப்பைத் தொடரவும் நீங்கள் அனைவரும் துஆ செய்யும்படி அக்குடும்பத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகிறேன்.கழிந்த வருடம் SSLC தேர்வில் 495 மதிப்பெண்ணும், 494 மதிப்பெண்ணும் பெற்ற இரட்டை சகோதரிகளின் தம்பிதான் அப்துல் மாஜித். இவருக்கு முன்னோடியாக, ஹாபிழ் பட்டம் பெற்ற பின் படிப்பை தொடர்ந்த உள்ளூர் மாணவர்களின்விபரம்.
மகேந்திரகிரி ISROவில் விஞ்ஞானியாக பணியாற்றும் (புதுத்தெரு) மாஹின் அவர்களின் மகன் கல்வத்தி அவர்கள் 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி காயல்பட்டினத்தில்
4 வருடங்கள் குர்ஆன் மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றார். பட்டம் பெற்று வெளிவரும் போதே 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸானார். பின்னர் +1, +2 படிக்க வழக்கம் போல் ஸ்கூல் சென்றார். +2 தேர்வில்
190.25% கட் ஆப் பெற்று சிவகாசி NEPCOSCHLENK ENGR. கல்லூரியில் மெக்கானிக் குரூப் எடுத்து படித்து 81% மார்க் பெற்று தேறியுள்ளார். தற்போது மாஸ்டர் டிகிரி படிப்பிற்காக மலேசியா செல்ல உள்ளார். ஹாபிழ் பட்டம் பெற்ற பின் தொடர்ந்து ஏழு வருடங்களாக (உள்ளூர்) மஸ்ஜிதுல் அன்வரில் ரமலானில் முழு குர்ஆன் ஓதி தொழுகை நடத்தினார்.
     (வெள்ளாடி சிவிளையில் வசிக்கும்) Er.செய்யிது முஹம்மது அவர்கள் மகன் ஷகீல் 5 ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி, உள்ளூர் பிர்தெளஸிய்யா அரபிக் கல்லூரியில் 3 வருடங்கள் குர்ஆன் மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றார். பட்டம் பெற்று வெளிவரும் போதே 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸானார். பின்னர் +1, +2 வகுப்பிற்கு வழக்கம் போல் ஸ்கூல் சென்றார். +2 தேறிய பின் நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு நேஷனல் காலேஜ் ஆப் இஞ்சினீயரிங்ல் 4 வருடங்கள்  IT படித்து முடிந்து, தற்போது சென்னை IT கம்பெனியில் பணி புரிகிறார். பட்டம் பெற்றது முதல் இப்போது வரை தொடர்ந்து ரமலானில் முழு குர்ஆன் ஓதி தொழ வைத்து வருகிறார்.
        இவர்கள் பாணியில் குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பது காயல்பட்டினத்தில். 300 பேர் வரை குர்ஆன் மனனம் செய்கின்றனர். இந்த பாணியின் முன்னோடி கடையநல்லூர் ஆகும். ஹாபிழ் ஆலிம் பட்டம் பெற்றMA பட்டதாரிகளை 40 வருடங்களுக்கு முன்பு கண்டுள்ளேன். இப்போதும் இது தொடருகிறது.

தகவல் சகோ அப்துல் அஜீஸ்

No comments:

Post a Comment